×

அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி லஞ்ச விவகாரம்: மதுரை அமலாக்கத் துறையினருக்கு சம்மன் அனுப்பிய நிலையில் போலீஸ் முன் ஆஜராகின்றனர்..!!

மதுரை: மதுரை தல்லாகுளம் காவல் நிலையத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் போலீஸ் முன் ஆஜராகின்றனர். திண்டுக்கல்லை சேர்ந்த அரசு மருத்துவர் சுரேஷ் பாபுவிடம் ரூ.20 லட்சம் லஞ்சம் பெற்றபோதாக டிசம்பர் 1ல் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத் துறை உயரதிகாரியின் உத்தரவின்பேரில் மதுரை தபால் தந்தி நகரிலுள்ள அமலாக்கத் துறை அலுவலகத்திற்கு மதுரை லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி சத்யசீலன் தலைமையில் அப்பிரிவு சோதனை மேற்கொண்டனர்.

பின்னர், மதுரை துணை மண்டல அமலாக்கத் துறை அலுவலகத்தில் பணிபுரியும் உதவி இயக்குநர் பிரிஜிஷ்ட் பெனிவால், தமிழக டிஜிபிக்கு அனுப்பிய புகாரில், ‘மதுரை அமலாக்கத் துறை அலுவலகத்துக்குள் லஞ்ச ஒழிப்புத் துறையினர் எனக் கூறி அத்துமீறி நுழைந்தவர்கள் மீதும், தேவையின்றி ஆவணங்களை திருடி சென்றவர்கள் மீதும் மதுரை காவல் ஆணையரிடம் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்குமாறு அமலாக்கத்துறை புகார் அளித்திருந்தது. இந்தப் புகார் தொடர்பாக அதிகாரிகளை அரசுப் பணி செய்யவிடாமல் தடுத்ததாக அமலாக்கத் துறை அதிகாரிகள், ஊழியர்கள் மீது தல்லாகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும், இது தொடர்பாக அமலாக்கத் துறையினருக்கும் சம்மனும் அனுப்பியிருந்தனர். இந்நிலையில், புகார் தொடர்பாக விசாரணை நடைபெறுவதை ஒட்டி அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆஜராக உள்ளனர்.

The post அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி லஞ்ச விவகாரம்: மதுரை அமலாக்கத் துறையினருக்கு சம்மன் அனுப்பிய நிலையில் போலீஸ் முன் ஆஜராகின்றனர்..!! appeared first on Dinakaran.

Tags : Ankit Tiwari Bribery ,Madurai ,Tallakulam Police Station, Madurai ,Suresh ,Dindigul ,Enforcement Department ,Dinakaran ,
× RELATED மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியில் ஊழியர் மீது காரை ஏற்ற முயற்சி